
'இந்தியன் 2 ' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து ஒட்டு மொத்த கோலிவுட் திரையுலகத்தையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பலரும் இந்த விபத்தில் உயிரிழந்த, துணை இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் மற்றும் புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த விபத்தில் இருந்து நடிகர் கமலஹாசனும், நடிகை காஜல் அகர்வால் மாற்று மேக் அப் கலைஞர் அமிர்தா ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியதாக ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் மேக் அப் கலைஞர் அமிர்தாராம்.
அதே போல் நடிகை காஜல் அகர்வால் இந்த விபத்து குறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது 'ஒரு நொடியில் நாங்கள் உயிர் தப்பியதால் இப்போது நான் இந்த மெசேஜை டைப் செய்து கொண்டு இருக்கின்றேன். இந்த விபத்து குறித்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த விபத்தில் இருந்து ஒரே ஒரு நொடி ஒரு உயிரை காப்பாற்றும் அளவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன். என்று குரிப்பிட்டிருந்தார்.
அமிர்தா கூறுகையில்... இந்த விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக, நாங்கள் இருந்த இடத்தில் இருந்து கண் இமைக்கும் நொடியில் குதித்தோம். பின் கீழே விழுந்த கிரேன், நாங்கள் அமர்ந்திருந்த சேரில் விழுந்து அவை நசுங்கி இருந்ததாகவும் அந்த மேக் அப் கலைஞர் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் பாதுகாப்பாக இருந்தாலும், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தன்னுடைய இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.