ரியல் ஹீரோ... மேஜர் சந்தீப் வாழ்க்கையை படமாகும் மகேஷ் பாபு!

By manimegalai aFirst Published Mar 2, 2019, 3:10 PM IST
Highlights

மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் கடந்த 2010ஆம் ஆண்டு பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தினார்கள்.  இதில் பலர் பலியானார்கள்.  
 

மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் கடந்த 2010ஆம் ஆண்டு பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தினார்கள்.  இதில் பலர் பலியானார்கள்.  

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் மோதி தனது உயிரை தியாகம் செய்தவர் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன். இவரது வாழ்க்கை சினிமா படமாக எடுக்கப்பட உள்ளது.

இந்தி, தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்துக்கு மேஜர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் மேஜர் சந்தீப் வேடத்தில் நடிக்க ஆத்விக் சேஷ் தேர்வாகியுள்ளார்.  சசிகரன் டிக்கா டைரக்ட் செய்கிறார்.  இவர் 'கூடாசரி' என்ற படத்தை இயக்கி பிரபலமானவர்.

இந்த படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தயாரிக்கிறார். படபிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.  படத்தை தயாரிப்பது குறித்து மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா கூறும்போது,  தேசிய அளவில் கதா நாயகனாக திகழ்ந்த ஒருவரின் வாழ்க்கையை படமாக்குவதில் பெருமைபடுகிறோம் இது இந்தியப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு சர்வதேச படமாக இருக்கும் என்றார்.

click me!