Mahesh Babu : மகேஷ்பாபுவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ; மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் தெலுங்கு ஸ்டார்?

Kanmani P   | Asianet News
Published : Dec 04, 2021, 04:57 PM IST
Mahesh Babu : மகேஷ்பாபுவுக்கு இப்படி ஒரு பிரச்சனையா ; மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும்  தெலுங்கு ஸ்டார்?

சுருக்கம்

Mahesh Babu : மூட்டு வலியால் அவதிப்பட்டு வரும் மகேஷ்பாபு மேல் அறுவைச்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கில்  வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த படம்  'கீதா கோவிந்தம்'. இந்த படத்தை இயக்குனர்  ராஷிகா,  விஜய் தேவரகொண்டா நடிப்பில் இயக்குனர் பரசுராம் உருவாக்கியிருந்தார்.

இந்த படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து பரசுராம் தற்போது  `சர்காரு வாரி பாட்டா'  என்கிற படத்தை இயக்கி வருகிறார்.  இதில்  மகேஷ் பாபுவு நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்  நடித்து வருகிறார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும்  14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் பகுதிகளில் நடந்து வருகிறது.

 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட தை தொடர்ந்து கடந்த  ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.

பின்னர்  2022-ம் ஆண்டு  ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீசர் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு  ஆகஸ்ட் 9 -ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நாளில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபா - பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடிக்கவுள்ள "மகேஷ் பாபு - 28" படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

த்ரிவிக்ரம் படத்தை முடித்துவிட்டு, ராஜமெளலி இயக்கவுள்ள படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் மகேஷ் பாபு. இது அவருடைய நடிப்பில் உருவாகும் 29-வது படமாகும்.

இந்நிலையில்  'சர்காரு வாரி பாட்டா' படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது அவருக்கு ஏற்கனவே இருந்த மூட்டு வலி அதிகமானதாக தெரிகிறது. இதனால் அவதிப்பட்டு வரும் மகேஷ்பாபு மேல் அறுவைச்சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மகேஷ் பாபு விரைவில் நலம் பெற அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!