சென்னையில் புயல் அடித்து நொறுக்கியபோது கூட, விஜய் டிவி சீரியல் குழு ஷூட்டிங் நடத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோவை நடிகை திவ்யா கணேஷ் வெளியிட வைரலாகி வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'மகாநதி'. நான்கு மகளை பெற்று கொண்டதால்... வெளிநாட்டில் ஓடாய் உழைத்து சம்பாதித்த பணத்தை, நண்பனிடம் ஏமார்ந்த துக்கத்தில் உயிரை விடுகிறார் சந்தானம். தந்தையின் உயிரிழப்பால்... அவரது மகள் கங்காவின் திருமணம் குமாரனுடன் எளிமையாக நடக்கிறது.
மேலும் தன்னுடைய தந்தையின் மரணத்திற்கு காரணம் தேடி வந்த, காவேரி இது அனைத்திற்கும் பசுபதி தான் காரணம் என கண்டுபிடித்து, ஒருவழியாக... அவரிடம் இருந்து தன்னுடைய தங்கையின் ஆபரேஷனுக்கு தேவையான பணத்தை வாங்கி கொண்டு சென்னைக்கு கிளம்புகிறார்.
பணத்தை குமரன் தொலைத்துவிட... வேறு வழியே இல்லாமல் விஜய், ப்ரியமானவளே பட பாணியில் 1 வருட காண்ட்ராக்ட் திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் இருவரும்... காதலில் ஒன்றிணைவார்களா? அல்லது பிரிவார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க... இந்த உண்மை வெளியே வந்தால் அதை எப்படி இந்த இரு குடும்பமும் தாங்கி கொள்ளும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலின் ஷூட்டிங் நேற்று சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலையும் பொருட்படுத்தாமல் நடந்துள்ளது. இதுகுறித்த ஷூட்டிங் வீடியோ ஒன்றை, திவ்யா கணேஷ் வெளியிட்டுள்ளார். கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்த, பிரதீப்பா இந்த சீரியலை விட்டு சமீபத்தில் விலகிய நிலையில், அவருக்கு பதில் கங்கா கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.