மோசமான நிலையை அடைந்துள்ள தமிழ் சினிமா..! மகேஷ் பாபு பட இயக்குனர் ஆதங்கம்! 

 
Published : Dec 03, 2017, 06:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
மோசமான நிலையை அடைந்துள்ள தமிழ் சினிமா..! மகேஷ் பாபு பட இயக்குனர் ஆதங்கம்! 

சுருக்கம்

mageshbabu pramochavam dubbing release

தெலுங்கில் மகேஷ் பாபு, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடிப்பில் 2௦16 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிரமோற்சவம். தமிழில் அனிருத் என்ற பெயரில் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிக்க, இயக்குநர் ராஜராஜ சோழன் இயக்குகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை ஏ.வி.எம். தியேட்டரில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜராஜ சோழன், “தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங்கில் வெளிவரும் இப்படத்திற்குத் தயாரிப்பாளர் அனிருத் என்று பெயரிட்டார்.


ஆனால் நான் அனிருத் பெயர் நன்றாக இல்லை என்று சொன்னேன். பின்னர் படத்தின் டைட்டிலை டிசைன் செய்து பார்த்த போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. டைட்டில் போஸ்டரை என் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு அனிருத் அக்கவுண்டிற்கும் அனுப்பி வைத்தேன்” என்றார்.


“தமிழில் இது பத்ரகாளி பிலிம்ஸின் 12வது படம். இதுதாண்டா போலீஸ், சூப்பர் போலீஸ் அப்படின்னு வரிசையாகப் படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பாபு 7 தலைமுறை சொந்தங்களை ஒன்றாக இணைப்பார். ஒரு பெரிய குடும்ப பின்னணியைக் கொண்ட படமாக இது இருக்கும். கடைசியாக ஒன்று சொல்ல விரும்புறேன். தமிழ் சினிமா மோசமான நிலையை அடைந்துள்ளது. அதற்குக் காரணம் இப்போதெல்லாம் மனம் இல்லாத தொழில்நுட்பம் தெரியாதவர்கள் தான் படம் எடுக்கிறார்கள். அதனால் தொழில் தெரிந்தவர்களிடம் படத்தை ஒப்படையுங்கள்” என்று கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!