
வெள்ளித்திரையில் காமெடி நடிகர்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு சின்னத்திரை காமெடி நடிகர்களையும் ரசிக்கின்றனர் ரசிகர்கள்.
அந்த வகையில் அதிகப்படியாக சின்னத்திரையில் கலக்கி வருபவர் மதுரை முத்து. இவருடைய குடும்பத்தில் தற்போது அரங்கேறியுள்ள சோகம் குடும்பத்தினரை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.
காமெடி நடிகர் மதுரை முத்து 'அசத்தப்போவது யாரு', 'கலக்கப்போவது யாரு', ஆகிய நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று பின் தன்னுடைய திறமையால் 'சண்டே கலாட்டா' என ஒரு தனி நிகழ்ச்சி மூலம் காமெடியில் கலக்கி வந்தவர். மேலும் தற்போது பிரபல சேனலில் ஒளிபரப்பாகி வரும், காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கிறார்.
தன்னுடைய காமெடியால் சின்னத்திரை மூலம் மட்டுமின்றி அவ்வப்போது பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வெளிநாடுகளிலும் இவருடைய காமெடி பேச்சுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்த நிலையில் தற்போது மதுரை முத்துவின் அம்மா வெள்ளத்தாய், இன்று காலை 8 மணி அளவில் காலமானார் இவருடைய இறுதிச் சடங்குகள் நாளை, இவருடைய சொந்த ஊரான மதுரை திருமங்கலத்தில் நடைபெற உள்ளது. இந்த சம்பவம் மதுரை முத்து குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய மனைவியை விபத்தில் பறிகொடுத்து பின் மறுமணம் செய்து கொண்ட மதுரை முத்து, தற்போது தன்னுடைய தாயை இழந்து இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.