சும்மா அட்சித் தூக்கிய அஜித்குமார்!! அண்ணா யுனிவர்சிட்டியில் கௌரவ ஆலோசகராக பணியாற்ற அழைப்பு !!

By Selvanayagam PFirst Published Feb 1, 2019, 8:29 AM IST
Highlights

ஆள் இல்லாத விமானத்தை வெற்றிகரமாக தயாரிக்க உதவிய நடிகர் அஜித்குமாருக்கு அண்ணா பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அண்ணா  யுனிவர்சிட்டியில் நிரந்தர கௌரவ ஆலோசகராக பணியாற்ற அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.!
 

அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான, நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் நடிகர் அஜித் ஆலோசனைகளை வழங்கி ஆலோசகராக 10 மாதம் பணி புரிந்தார்.

 இந்நிலையில் இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டும், அஜித்தின் பங்களிப்பை பாராட்டியும் அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. வருங்காலத்தில் விருப்பம் இருந்தால் தேவைக்கேற்ப, கவுரவ பதவியில் அஜித் ஆலோசகராக பணியாற்ற வேண்டும் என்றும் அவரை அண்ணா பல்கலை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அஜித்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அஜித்தின் ஆலோசனையில் உருவாக்கப்பட்ட   ஆளில்லா ஏர் டாக்ஸி அனைவரையும் கவர்ந்து குறிப்பிடத்தக்கது.

click me!