'கண்ணே கலைமானே' ரிலீஸ் தேதி உறுதிப்படுத்திய உதயநிதி!

By manimegalai aFirst Published Jan 31, 2019, 7:49 PM IST
Highlights

'தர்மதுரை' படத்தை தொடர்ந்து, இயக்குனர் சீனுராமசாமியின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணே கலைமானே'.  இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்துள்ளார்.
 
'கண்ணே கலைமானே' சமீபத்தில் சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

உதயநிதி கிராமத்து இளைஞனாக இந்த படத்தில் நடித்துள்ளார், மேலும்   தமன்னா, வடிவுக்கரசி, வசுந்தரா காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
click me!