உயருகிறது தியேட்டர் டிக்கெட் கட்டணம்?... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 11, 2021, 7:47 PM IST
Highlights

இதனிடையே தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. 

பொங்கல் பண்டிகைய முன்னிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு டாப் ஸ்டார்களான விஜய் நடிப்பில் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால் இரு தினங்களுக்குப் பிறகு மத்திய அரசிடம் வந்த கடிதத்தில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்ப பெறும் படி அறிவுறுத்தப்பட்டது. 

இதையடுத்து தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பை கடந்த வாரம்  தமிழக அரசு ரத்து செய்தது. 50 சதவீத பார்வையாளர்களைக் கொண்டு தியேட்டர்களை இயக்க வேண்டும் என்ற டிக்கெட் கட்டணத்தை உயர்ந்துவது ஒன்றே சரியான வழி என தியேட்டர் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

 

இதனிடையே தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத இருக்கையுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்படும் என்ற அரசின் உத்தரவுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கை அரசு பரிசிலீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

click me!