
1996ம் ஆண்டு கமல் ஹாசன் அப்பா, மகன் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘இந்தியன்’. இதில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, நாசர், கவுண்டமணி, செந்தில், கஸ்தூரி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தது. இந்த கதையின் இறுதியில் இந்தியன் தாத்தா தீ விபத்தில் தப்பித்து, வெளிநாட்டில் இருப்பது போல் காட்டப்படுவதோடு படம் நிறைவடையும். எனவே இந்தியன் 2 படத்தை காண பலரும் காத்திருந்தனர்.
பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடைபெற்ற கிரேன் விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் படப்பிடிப்பே சில நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது.
இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமே 7 மாதத்திற்கு முடங்கியது. அதன் பின்னர் படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டால் இந்தியன் 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தொடங்கப்படாமலேயே இருந்தன. தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் லைகாவின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது என்ற கேள்வி எழுந்தது.
இதையும் படிங்க: தோழி யாஷிகாவையே ஓரங்கட்டிய ஐஸ்வர்யா தத்தா... புதுவித புசு புசு உடையில் கண்கூச வைக்கும் உச்சகட்ட கவர்ச்சி...!
தற்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது படப்பிடிப்பை பிப்ரவரியில் நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். அதற்காக பிப்ரவரி மாதத்தில் தேதிகளை தயாராக வைத்துக் கொள்ளும் படி காஜல், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.