நடிகர் தனுசுக்கு ஆதரவாக தீர்ப்பு - மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

 
Published : Apr 21, 2017, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
நடிகர் தனுசுக்கு ஆதரவாக தீர்ப்பு - மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சுருக்கம்

madurai high court judgement in favour of dhanush

நடிகர் தனுஷ் தங்கள் மகன்தான் என்று மேலூர் தம்பதியர் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் கோரிய மனுவை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில் காணாமல்போன தனது மகன் கலைச்செல்வன் தான், திரைப்பட நடிகர் தனுஷ் என்று உரிமை கோரி இருந்தனர்.

மேலும், தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் தனுசின் அங்க அடையாளம் சரி பார்க்கப்பட்டது. மேலும், டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கிடையில், தனுஷின் வழக்கறிஞர், ‘பணம் கேட்டு கதிரேசன் - மீனாட்சி தம்பதி மிரட்டுகிறார்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று வெளியானது. இதில் கதிரேசன் தரப்பினர், மனுவில் குறிப்பிட்டு இருந்த தகவல்கள் பொய்யானவை என்று கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!