பாதியில் நிறுத்தப்பட்ட ராக்கெட்ரி..கொதித்தெழுந்த ரசிகர்கள்... வேண்டுகோள் விடுத்த மாதவன்!

By Kanmani PFirst Published Jul 11, 2022, 5:25 PM IST
Highlights

மாதவன் தனது ட்வீட்டில் , ஒரு உண்மையான காரணமும் இருந்திருக்க வேண்டும். தயவு செய்து அமைதியாக இருங்கள் மற்றும் கொஞ்சம் அன்பை காட்டுங்கள். பணிவான வேண்டுகோள். நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

பிரபல நடிகர் மாதவன் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். முதல் படமே அசத்தலான படமாக அமைந்துவிட்டது இவருக்கு. ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் படத்தை இயக்கியுள்ள மாதவன் தற்போது  பாராட்டுகளை பெற்று வருகிறார். இஸ்ரோ விஞ்ஞானி ஆன நம்பி நாராயணனின் சொந்த வாழ்க்கை வரலாறாக இந்த படம் உருவாகியுள்ளது. இது  பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது. கடந்த ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளி பொறியாளரின் வாழ்க்கையை திரைக்கு கொண்டுவர மாதவன் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்துள்ளார். நேர்மறையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்ஷனை பெற்றது.முன்னதாக கேன்ஸ்  விழாவில் திருடப்பட்ட பின்னர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே இந்த படம் குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

மேலும் செய்திகளுக்கு...அடேங்கப்பா....மற்ற மொழிகளிலும் மாஸ் காட்டும் கமலின் விக்ரம்..

இந்த படத்தை எழுதியும் தயாரித்துள்ள மாதவன் தான் இதில் விஞ்ஞானியாக நடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம்  தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என பன்மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.  உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன்,  பின்னர் உண்மை தெரிந்த பிறகு விடுதலையானார்.

மேலும் செய்திகளுக்கு...nayanthara marriage photos : பின்வாங்கிய பிரபல நிறுவனம்..கடுப்பாகி திருமண புகைப்படங்களை வெளியிடும் நயன்தாரா!

இதற்கிடையே விஞ்ஞாணி  மற்றும் அவரது குடும்பம் சந்தித்த இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் விஞ்ஞானி நம்பினாராயணன் கொடுத்துள்ளார். இதில் சிம்ரன், ரவி  ராகவேந்திரா, நிஷா கோஷல் மற்றும் பலர் நடித்துள்ளனர். அதோடு சூர்யா, ஷாருக்கான் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.



இந்நிலையில் திரையரங்கு ஒன்றில் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் கொல்கத்தாவில் இந்த படம் திரையிடப்பட்ட திரையரங்கு ஒன்றில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டடு உள்ளது. படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் தெரியவில்லை. அதனால் மனமுடைந்த சில ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகத்திடம் திடீரென காரணத்தைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளுக்கு...தி க்ரே மேன் படம் குறித்து ஓப்பனாக பேசிய தனுஷ்.. வாய்ப்பை கேட்டதும் துள்ளி குதித்ததாக பேட்டி

மேலும் தங்கள் டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி கேட்டனர். தியேட்டர் நிர்வாகத்துடன் ரசிகர்கள் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.  இந்த வீடியோவுக்கு பதில் அளித்த மாதவன் ரசிகர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் , ஒரு உண்மையான காரணமும் இருந்திருக்க வேண்டும். தயவு செய்து அமைதியாக இருங்கள் மற்றும் கொஞ்சம் அன்பை காட்டுங்கள். பணிவான வேண்டுகோள். நிகழ்ச்சி விரைவில் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

There must have been a genuine reason and cause . Pls do be calm and show some love ppl. Humble request. The show will be in soon.all the love 🚀🚀🙏🙏❤️❤️ https://t.co/MPPMh6e9b3

— Ranganathan Madhavan (@ActorMadhavan)

 

click me!