
மாடல்லாக இருந்து பின் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய, அலைபாயுதே படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல படைகளின் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வளம் வந்தார்.
பிறகு அவரது பார்வை ஹிந்தி, ஆங்கிலச் போன்ற பிற மொழி படங்களில் ஆர்வம் காட்டி வந்தார், மேலும் சமீபத்தில் ஏற்பட்ட சிறு விபத்தில், கால்களில் அடி பட்டது அதன் காரணமாக சில காலம் திரையுலகை விட்டு ஒதிங்கி இருந்தார்.
பிறகு இந்த வருடம் வெளியான இறுதிச்சுற்று என்ற படம் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் மாதவன்.
இந்த படத்துக்கு பிறகு மாதவன் பல கதைகளை தீவிரமாக கேட்டு வருகிறார். அதோடு தனக்கு வாய்ப்பு தேடுவதற்காக ஒருவரை மேனேஜராகவும் நியமித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு தயாரிப்பாளர் மாதவனை தன்னுடைய படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க வைக்க அவரது மேனேஜரிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு மாதவன் மேனேஜர், சிறப்பு வேடத்தில் இரண்டு நாள் நடிக்க இரண்டரை கோடி சம்பளம் என்று சொல்லியிருக்கிறார். இது விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் கூட இரண்டு நாட்களுக்கு கேட்க தயங்கும் தொகை.
ஆனால் இத்தனை கோடி சம்பளம் மாதவன் கேட்டாரா இல்லையா என்பது இது வரை தெரியவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.