மாநாடு படத்தின் டெலிடெட் சீன் ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிம்பு, எதிரிகளை பீர் பாட்டிலால் அடித்து துவம்சம் செய்யும் படியான காட்சி இடம்பெற்றுள்ளது.
சிம்புவின் படங்கள் என்றாலே பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்தது தான், அந்த வகையில் பல சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் மத்தியில், கடந்த மாதம் 25-ந் தேதி வெளியான திரைப்படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.
ரிலீசுக்கு முன்னர் பல்வேறு தடைகளை சந்தித்த இப்படம், அதன் வெற்றியால் தற்போது அவை அனைத்தையும் தவிடுபொடி ஆக்கி உள்ளது. சிம்புவின் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு, இப்படத்தின் மூலம் மாஸான கம்பேக் கொடுத்துள்ளார். திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு திரைப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
undefined
இந்நிலையில், மாநாடு படத்தின் டெலிடெட் சீன் ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சிம்பு, எதிரிகளை பீர் பாட்டிலால் அடித்து துவம்சம் செய்யும் படியான காட்சி இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த சண்டைக் காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்றும் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார். ஏனெனில், இவ்வளவு நல்ல சீனை படத்தில் வைக்காமல் டெலிட் செய்து விட்டீர்களே என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.