Maanaadu update : மாநாடு ரீமேக்...மொத்தமாக கைப்பற்றிய ஒரே நிறுவனம்.. யாரது தெரியுமா?..

Published : Jan 06, 2022, 05:51 PM IST
Maanaadu update : மாநாடு ரீமேக்...மொத்தமாக கைப்பற்றிய ஒரே நிறுவனம்.. யாரது தெரியுமா?..

சுருக்கம்

Maanaadu update : சிம்பு நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்து வரும் மாநாடு படத்தின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமையை அதிக விலை கொடுத்து ஒரே ஒரு தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம்...

நடிகர் சிம்பு (simbu) நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி (suresh kamatchi) தயாரிப்பில் உருவான "மாநாடு" (Maanaadu) திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியாகி உலகமெங்கும், மற்றும் தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

'மாநாடு' படத்தின் முதல் நாள் வரவேற்பே படக்குழுவை திருப்தி படுத்திய நிலையில்.. படத்தின் வெற்றிக்கு சிம்பு தன்னுடைய அறிக்கை மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தது மட்டும் இன்றி, தயாரிப்பாளரோடு இரண்டாவது நாளே கேக் வெட்டி இந்த படத்தின் வெற்றியை கொண்டாடினார்.

ஆனால் இப்படம் தற்போது வரை திரையரங்குகளில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையில்,  படக்குழு பிரமாண்ட சக்ஸஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். எவ்வித விடுமுறையும் இல்லாத நாட்களில் வெளியானாலும், வசூலில் மாஸ் காட்டி வருகிறது சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் (maanaadu movie). முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார், 7 முதல் 8 கோடி வரை வசூல் செய்திருந்தது. 

இதற்கிடையே மாநாடு படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். அதோடு  தியேட்டர்களில் கலக்கி வரும் மாநாடு கடந்த 24-ம் தேதி கிருஸ்துமஸ் விழா சிறப்பாக சோனி லைவில் வெளியானது.

இந்நிலையில் மாநாடு படத்தை இந்திய மொழிகளில் ரீமேக் செய்யவும் தெலுங்கில் திரையரங்கு டப்பிங் செய்யவும் சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் அதிக விலை கொடுத்து பெற்றுள்ளதாக தெரிகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!