SK20 Update : செம அப்டேட்..மாநாடு- யை தொடர்ந்து SK 20-க்கு தயாரான வெங்கட் பிரபு..இந்த முறை என்ன ரோல் தெரியுமா?

By Kanmani PFirst Published Jan 6, 2022, 5:25 PM IST
Highlights

SK20 Update : சிம்புவை வைத்து மாநாடு என்னும் ஹிட் கொடுத்துள்ள இயக்குனரை வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்திலும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

அயலான், டான் போன்ற படங்களிலும் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவற்றுள் டான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். 

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

டான் படத்தை கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த சமயத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாவதால், டான் படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளனர். அதன்படி இப்படத்தை இந்தாண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை ஒட்டி வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து sk 20 படம் குறித்த தகவலை சிவர்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அணுதீப் இயக்கத்தில்  உருவாக்கவுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாகவும் சுரேஷ் தயாரிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் புத்தாண்டு அன்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாநாடு படத்தின் மூலம் மாஸ் காட்டிய இயக்குனர் வெங்கட் பிரபு SK20 படத்தில் இயக்குனர் அனுதீப்புடன் படத்தின் திரைக்கதையில் பணியாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது.

click me!