மாமன்னன் படத்தில் நெகடிவாக இருந்தது என்ன?.. உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த அல்டிமேட் காமடி வீடியோ!

By Ansgar R  |  First Published Jul 4, 2023, 4:07 PM IST

மாமன்னன் படம் பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வந்த ஒருவரிடம், அந்த படம் குறித்து கேட்டபோது அவர் அளித்த நகைச்சுவையான பதில் தற்போது வைரலாகி வருகின்றது. 


மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மாமன்னன் திரைப்படம். மேலும் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். 

உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜூக்கு விலை உயர்ந்த மினி கூப்பர் காரை பரிசாக அளித்த நிலையில், இந்த திரைப்படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் சுமார் 2 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

Latest Videos

இதையும் படியுங்கள் : சினிமாவுக்காக ஒரிஜினல் ‘மொட்டை பாஸ்’ ஆக மாறி மாஸ் காட்டிய டாப் ஹீரோஸ்

இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் வடிவேலு அவர்கள் நடித்திருப்பது, அவருடைய ரசிகர்களை பெருமளவு சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசையில் அனைத்து பாடல்களுமே மிக மிக ரம்யமாக அமைந்துள்ளது. குறிப்பாக வடிவேலு குரலில் வரும் ராசா கண்ணு பாடல் பலரின் மனதை வருடுகின்றது.

இந்நிலையில் இந்த படம் குறித்த ஒரு சிறிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மாரி செல்வராஜ், நாயகி கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ரகுமான் உள்ளிட்டோரை டேக் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். 

😀 https://t.co/wt8uVfg52z

— Udhay (@Udhaystalin)

அந்த விடியோவில் Youtube பிரபலம் "காத்து கருப்பு" கலை, மாமன்னன் படம் பார்த்து விட்டு வெளியே வந்த பொழுது அவரிடம் படத்தில் நெகட்டிவாக தோன்றியது என்ன என்று கேட்டுள்ளார் நிருபர். அதற்கு படத்தில் நெகட்டிவ்வாக தோன்றியது "எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி, தனது இருக்கையில் சரியாக உட்காராமல் அங்குமிங்கும் ஆடிக்கொண்டு படத்தில் வரும் முக்கியமான காட்சிகளை பார்க்க விடாமல் செய்தது தான் நெகட்டிவ்வாக தெரிந்தது" என்று கூற, இதை அனைவருக்கும் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

இதையும் படியுங்கள் : கண்களில் தெரியும் பயம்.. 'செவ்வாய்க்கிழமை' படத்தின் டீசர் வெளியானது!

click me!