மாமன்னன் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகின்றது. குறிப்பாக வடிவேலு குரலில் வரும் ராசா கண்ணு பாடல் சூப்பர் ஹிட் பாடல் என்றே கூறலாம்.
உலக நாயகன் கமல்ஹாசனின் ஐகானிக் திரைப்படமான "தேவர் மகன்" திரைப்படம் தான், தன்னை "மாமன்னன்" என்ற திரைப்படத்தை உருவாக்க தூண்டியது என்றும். அந்த திரைப்படம் தனது வாழ்க்கையில் பல மன பிறழ்வுகளை கொடுத்துள்ளதாகவும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு மேடையில் கூறியிருந்தார்.
மேலும் அதே மேடையில் உலக நாயகன் கமல் முன்பாகவே, அவருடைய "தேவர்மகன்" படத்தை விமர்சித்து அவர் பேசிய நிலையில் அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. இணையத்திலும் மாரி செல்வராஜ் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வந்தார்.
ஆனால் தற்பொழுது மாமன்னன் திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை கண்டு வருகிறது. இந்த வெற்றியை படக்குழுவினர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதன் பிறகு ஒரு இன்ப அதிர்ச்சியாக இயக்குனர் மாரி செல்வராஜிற்கு, படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கி அவரை மகிழ்வித்தார்.
இதையும் படியுங்கள் : அச்சச்சோ ஷாருக்கானுக்கு என்னாச்சு - படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து!
இது ஒருபுறம் இருக்க, இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக "நெஞ்சமே நெஞ்சமே" என்ற பாடலும், வடிவேலு குரலில் வெளியான "ராசா கண்ணு" என்ற பாடலும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்டு எவ்வளவு நாளாயிற்று !!
ஐயா தலைவா!
நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம்.
என்ன ஒரு வரிகள்
அந்த வகையில் விஜய் ஏசுதாஸ் குரலில் வெளியான "நெஞ்சமே நெஞ்சமே" பாடலை கேட்க பிரபல இயக்குனர் செல்வராகவன், "தமிழில் இப்படி ஒரு பாடலை கேட்டு எவ்வளவு நாளாயிற்று" என்று கூறியுள்ளார். மேலும் ரகுமான் அவர்களை டேக் செய்து "தலைவா நாடி நரம்புக்குள் புகுந்து மயக்கும் அதிசயம் இது" என்று கூறி அவரை புகழ்ந்துள்ளார்.
மேலும் இந்த வரிகள் மிக மிக அருமையாக இருக்கிறது என்று கூறி, இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் எழுதிய பாடல் ஆசிரியர் யுகபாரதி அவர்களையும் செல்வராகவன் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள் : மாமன்னன் படத்துக்காக அவர் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?