பிக் பாஸ் குடும்பத்தின் முன்னாள் தலைவர் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்...

 
Published : Jul 07, 2017, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
பிக் பாஸ் குடும்பத்தின் முன்னாள் தலைவர் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்...

சுருக்கம்

lyricist snegan shocking news

கடந்த மாதம் பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலங்களின் உண்மை முகங்களை வெளிப்படுத்தி வரும் விதத்தில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 15 போட்டியாளர்களில் ஒருவர் கவிஞர் சினேகன்.

பாடலாசிரியராகவும் கவிஞராகவும் அறியப்பட்ட இவரை பற்றி தற்போதுதான் அதிர்ச்சியூட்டும் பல பகீர் தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளது.

அதில் ஒன்று சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த, பிரபாகரன் என்பவர் பாடலாசிரியர் சினேகன் தன்னுடைய மனைவி ஜமுனாவை அழைத்து சென்று விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார். இன்னும் அந்த புகார் நிலுவையில் உள்ளது.

அதே போல 2007 ஆம் ஆண்டு டைனமிக் திருமணம் என்கிற பெயரில் ஒரு சர்ச்சை திருமணம் முதல் முதலாக புதுக்கோட்டையில் நடத்தப்பட்டது. இதில் அனைவரும் பெண், மாப்பிளையை கட்டி பிடித்து, முத்தம் கொடுத்து  தான் வாழ்த்து கூற வேண்டும். மேலும் அங்கு வந்திருப்பவர்கள் அனைவரையும் கட்டி பிடித்து, முத்தம் கொடுக்க வேண்டும். இந்த திருமணம் சினேகன் தலைமையில் தான் நடத்தப்பட்டது.

நீங்கள் கவனித்திருந்தால் வையாபுரி குடும்பத்தை மிஸ் பண்ணுவதை நினைத்து அழும் போது அவரை சினேகன்  2 நிமிடம் கட்டிப்பிடித்து இறுதியில் அவருக்கு முத்தம் கொடுத்திருப்பார். 

கடந்த ஆண்டு பீப் பாடல் மூலம் சிம்பு சர்ச்சையில் சிக்கியபோது, சிம்புவை விட பல பெண் கவிஞர்கள் இதை விட ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் எழுதுகின்றனர் என சினேகன் கூறினார். அதற்கு பல்வேறு கவிஞர்களும், பிரபலங்களுக்கும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாதுகாப்பாக மீட்கப்பட்ட கிரிஷ்: முத்துவிற்கு வந்த சந்தேகத்தால் குழம்பிய குடும்பம்; சிறக்கடிக்க ஆசை சீரியல்!
மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!