
ஏதாவது சர்ச்சையைக் கிளப்பி அதன் மூலம் பரப்பரப்பைக் கூட்டி இந்த நிகழ்ச்சியின் TRP ரேட்டிங்கை அதிகரித்து செம்மையாகக் கல்லா
கட்ட விரும்பும் தனியார் தொலைக்காட்சியின் முயற்சி நான்கே தெரிகிறது.
தனியார் தொலைக்காட்சியில் கடந்த 11 நாட்களாக ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமூகவலைதளவாசிகளால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் பரபரப்பு விறுவிறுப்பு காட்சிகள் அரங்கேறி வருகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம், நேற்று முன்தினம் நடந்த பிக் பாஸ் டாஸ்கில் பங்கேற்ற அனைவரும் தமிழ் தாய் வாழ்த்து பாடணும் இதற்கு ஆசிரியர் சினேகன் தமிழ் தெரியாத நமிதா, ஓவியா, கணேஷ் போன்றவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படியாவது பாடவேண்டும் என மனப்பாடம் செய்துகொண்டிருக்க.
ஆனால் ஜூலியோ தனக்கு தமிழ் தாய் வாழ்த்து தெரியும் என்பதால் ஓவராக சீன போட்டு கத்தி கத்தி படித்திருக்கிறார். இதனால் மற்றவர்கள் ரொம்பவே டென்ஷானானார்களாம். இதனையடுத்து ஒவ்வொருத்தராக சினேகன் முன்னாடி வந்து தங்களுக்கு தெரிந்த வரியை மட்டுமே பாடியிருக்கிறார்கள் எல்லாமே தெரிந்த மாதிரி ஓவர் கான்ஃபிடண்ட் ஜூலி பாடலை மட்டும் பாடாமல் தமக்கு எல்லாமே தெரியும் என ஸீன் போட தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியது தாயுமானவர் என கூறி எல்லோர் முன்னாடியும் மொக்க வாங்கியுள்ளார்.
சரி அது இருக்கட்டு தமிழில் புலமை பெற்ற கவிஞரான சினேகனை ஆசிரியரா போட்டாங்க ஆனால் அவரோ எந்த ரியாக்ஷனையுமே காட்டல தமிழ் தாய் வாழ்த்தை எழுதியவர் திரு. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என இவருக்கும் தெரியாதா? இதெல்லாம் தெரியாம பண்றாங்களா இல்லை TRP ரேட்டிங்கை ஏத்துவதற்க்காக செய்றாங்களான்னு சமூகவலைதளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.