பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் பிறந்த பாடலாசிரியர் கபிலன், நடிகர் விக்ரம் நடிப்பில், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான, தில் படத்தில் இடம்பெற்ற 'உன் சமையல் அறையில்' என்கிற சூப்பர் ஹிட் பாடல் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே... இவரது வரிகள் பலரை முணுமுணுக்க வைத்ததை தொடர்ந்து, நரசிம்மா, அல்லி தந்த வானம், தவசி என அதே ஆண்டில் அடுத்தடுத்த படங்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
அதிலும் குறிப்பாக இவர் பாடலாசிரியராக அறிமுகமான சில வருடங்களில் இவர் வரிகளில் வெளியான, சகலா கலா வல்லவனே... ஆல்தோட்ட பூபதி நான்னட.. ஆசை ஆசை இப்பொழுது, கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா போன்ற பாடல்கள் வேற லெவலுக்கு ஹிட் லிஸ்டில் இடம்பிடித்தது. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர், விரைவில் வரவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இவரது மகள் தூரிகை... அரும்பாக்கம் ஏ.டி.எம் காலனியில் வசித்து வரும் அடுக்கு மாடி வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தற்போது இவரது உடல் உடல்கூறாய்வு பரிசோதனைக்காக, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் இளம் வயதில் தூரிகையின் மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.