எழவே முடியாத அளவிற்கு அடிவாங்கிய லைகா நிறுவனம்.. மீண்டு வருமா?

Published : May 23, 2025, 03:04 PM ISTUpdated : May 24, 2025, 09:12 AM IST
Lyca

சுருக்கம்

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய லைகா ப்ரொடக்ஷன்ஸ் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன? லைகா ப்ரொடக்ஷன்ஸ் மீண்டு வருமா? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

லைகா ப்ரொடக்ஷன்ஸ் எப்போது துவங்கப்பட்டது?


லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். இது 2014-ம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது. லைகா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமான இது, திரைப்படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகம் செய்வது போன்ற பணிகளை செய்து வந்தது. 2014-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ திரைப்படமே இந்நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் ஆகும்.


தொடர் தோல்விகளை சந்தித்த லைகா தயாரித்த படங்கள்

சமீப காலமாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த சில பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியைத் தழுவின ‘லால் சலாம்’, ‘இந்தியன் 2’, ‘சந்திரமுகி 2’, ‘விடாமுயற்சி’, ‘வேட்டையன்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாதது நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

லைகாவின் வீழ்ச்சிக்கான பிற காரணங்கள்

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்குப் பதிலாக, வெறும் நட்சத்திர அந்தஸ்தை மட்டுமே நம்பி அதிக பட்ஜெட் படங்களை லைகா நிறுவனம் தேர்ந்தெடுத்தது. இதுவும் லைகாவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. லைகா நிறுவனம் மிகவும் நம்பி இருந்த ‘பொன்னியின் செல்வன் 2’ எதிர்பாராத அளவு வசூலிக்காதது நிறுவனத்திற்கு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது

ஒரே நேரத்தில் பல பெரிய படங்களை தயாரிப்பதில் நிறுவனம் அகலக்கால் வைத்தது. பெரிய நிறுவனமாக இருந்த போதிலும் இவ்வளவு பெரிய முதலீடுகளை ஒரே நேரத்தில் கையாள கையாள முடியாத நிலை ஏற்பட்டது. இது மட்டுமில்லாமல் உள்நாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறுவதில் சிக்கல்கள், லண்டனில் உள்ள பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட சிரமங்கள் ஆகியவை லைகா நிறுவனத்தை கடும் நிதி நெருக்கடியில் தள்ளின.

கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்த லைகா நிறுவனம்

லைகா மொபைல்ஸ் நிறுவனம் பல்வேறு நாடுகளில் வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியது. பிரான்சில் 2023-ல் பண மோசடியில் முக்கிய வழக்கில் இந்த நிறுவனத்திற்கு 10 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய அமலாக்கத்துறை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தி சட்டவிரோத கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆதாரங்களை கைப்பற்றியது. இந்த சட்ட பிரச்சனைகளும் லைகாவின் நிதி நிலையை கடுமையாக பாதித்தன.

பொருளாதார சிரமங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ள லைகா மீண்டும் பட தயாரிப்பை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும், விரைவில் புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Samyuktha Menon : ஆத்தாடி! வர்ணிக்க வார்த்தையே இல்ல.. 'வாத்தி' பட நாயகி சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Anchor Dhivyadharshini : தம்பி கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? தொகுப்பாளினி டிடி கட்டிய காஞ்சிப்பட்டின் விலை தெரியுமா?