
ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவி படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெள்ளிக்கிழமை ரிலீஸாகியது. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
தர்மதுரை உள்பட தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத தமன்னா, தேவி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்றார். அதுமட்டுமின்றி தேவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தமன்னாவை புகழ்ந்து தள்ளினார் பிரபுதேவா.
குறிப்பாக தமன்னாவின் நடனத்தை வெகுவாக புகழ்ந்தார். இதைகேட்டு அங்கேயே தமன்னா ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த சம்பவங்களையடுத்து பிரபுதேவாவும், தமன்னாவும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர்கள் காதலர்கள் தான் என தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் உறுதிபட கூறியுள்ளார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.
பிரபுதேவாவுக்கு தற்போது 43 வயது ஆகிறது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை வற்புறுத்தி வருகிறார்களாம்.
தமன்னாவையும் இதுவரை எந்த நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்கள் வரவில்லை. பிரபுதேவாவிடம் தமன்னா மனதை பறிகொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இவர்களது ரகசிய காதல் விவகாரம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.