
பிக்பாஸ் மூன்றாவது சீசனில், போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளவர், இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவருக்கு ஓவியா அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இல்லா விட்டாலும், தற்போது கலந்து கொண்டுள்ள பிரபலங்களில், அதிக ரசிகர்கள் இருப்பது இவருக்கு தான்.
இவர் ஒருவரை, பற்றி மற்றொருவரிடம் புறம் பேசாமல், பொய், அதிக பிரசங்கி தனம் என இல்லாமல், தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருப்பதால், பலரையும் சைலண்டாகவே இருந்து தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
அதே போல், இவரின் டான்ஸ் மற்றும் பாடலும் இவரை ரசிகர்கள் மத்தியில் தனியாக காட்டுகிறது. ஏற்கனவே பிரபல நடன இயக்குனர் கலா மாஸ்டர், ஒரு பேட்டியில்... ஒரு சிறந்த நடிகையாக ஆகும் முழு தகுதியும் லாஸ்லியாவிற்கு உள்ளது. பார்க்க அழகாக மட்டும் இல்லாமல், அவரின் சின்ன சின்ன அசைவுகளும் அழகாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, முன்னணி நடிகர் ஒருவர் படத்தில், லாஸ்லியாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும். அவர் வெளியே வந்ததும் புக் செய்ய படக்குழு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.