ரொம்ப தப்பு கவின்... தன் மீதே பழி போட்டுக்கொள்ளும் லாஸ்லியா!

Published : Jul 19, 2019, 02:20 PM ISTUpdated : Jul 19, 2019, 02:30 PM IST
ரொம்ப தப்பு கவின்... தன் மீதே பழி போட்டுக்கொள்ளும் லாஸ்லியா!

சுருக்கம்

வனிதா வெளியே போகும் முன், சத்தத்தில் ரணகளமான பிக்பாஸ் வீடு, இப்போது அமைதியாக சென்றாலும், காதல் சண்டைகள் மிகவும் அமைதியாக நடந்து வருகிறது.   

வனிதா வெளியே போகும் முன், சத்தத்தில் ரணகளமான பிக்பாஸ் வீடு, இப்போது அமைதியாக சென்றாலும், காதல் சண்டைகள் மிகவும் அமைதியாக நடந்து வருகிறது. 

முக்கோண காதல் கதையான கவினின் காதலுக்கு சாக்ஷி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவருமே ட்விஸ்ட் வைத்துள்ளனர். இதனால் மாறி மாறி இருவரையும் சமாதானம் செய்து வருகிறார் கவின். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், இன்றைய புரமோவில் கவினிடம் லாஸ்லியா இதுகுறித்து வருத்தமாக கூறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  இந்த ப்ரோமோவில்... 'நீ பண்ணியது தப்பு கவின், பெரிய தப்பு. ஒருத்தரோட ஃபீலிங்ஸோட விளையாடறடு பெரிய தப்பு.  எல்லாமே என்னாலதான்னு தோணுது. பைத்தியக்காரி மாதிரி நான் பிஹேவ் பண்ணியிருக்கேன்' என்று கூறிவிட்டு, எல்லாமே முடிஞ்சிடுச்சி என கோபமாக எழுந்து செல்கிறார் லாஸ்லியா.

ஏற்கனவே வெளியான முதல் புரோமோவில், சாக்ஷியிடம் மன்னிப்பு கேட்டு  கண்கலங்கும் காட்சி வெளியானது. சாக்ஷி அவருடைய மன்னிப்பை ஏற்க மறுத்திருந்தார். தற்போது கவினை நிராகரிப்பது தன் மீது தவறு உள்ளது என லாஸ்லியாவும் வருத்தத்துடன் பேசியுள்ளார். இனி கவினின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!