
Lokesh Kanagaraj Debut As Hero : மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி என்கிற மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்து கோலிவுட்டையே ஈர்த்தார். கைதி படத்தின் வெற்றிக்கு பின் விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற மாஸ் படத்தை இயக்கினார். அப்படமும் ஹிட்டானதால் தன்னுடைய குருவான கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்த லோகி, அவருக்கு விக்ரம் என்கிற அதிரிபுதிரியான வெற்றிப்படத்தை கொடுத்தார். பின்னர் லியோ படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் வெற்றிகண்டார் லோகேஷ்.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அமீர்கானும் கேமியோ ரோல் ஒன்றில் நடிக்கிறார். கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையடுத்து கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். இதுதவிர பாலிவுட் நடிகர் அமீர்கானை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படத்தை இயக்க கமிட்டாகி இருக்கிறாராம் லோகி.
இம்புட்டு பிசியான இயக்குனராக வலம் வரும் அவர், தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகி இருக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளார்.
லோகேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறாராம் லோகேஷ். இதற்காக பாங்காக் சென்று அங்கு அனுபவம் வாய்ந்த கலைஞர்களிடம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்று வருகிறாராம். முதல் படத்திற்காக இவ்வளவு ரிஸ்க் எடுத்து லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ள தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.