தயவு செய்து யாரும் வெளியே வராதீங்க..! கையெடுத்து கும்பிட்டு கதறி அழுத நடிகர் வடிவேலு! வீடியோ...

By manimegalai a  |  First Published Mar 27, 2020, 11:05 AM IST

கொரோனா வைரஸின் தாக்கம் பல உலக நாடுகளை கடந்து,  இந்தியாவையும் தற்போது அச்சுறுத்தி வருகிறது. இதன் தீவிரத்தை உணர்ந்து, மக்கள் அனைவரும் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 உத்தரவை கடைபிடிக்குமாறு அறியுறுத்து வருகிறது.
 


கொரோனா வைரஸின் தாக்கம் பல உலக நாடுகளை கடந்து,  இந்தியாவையும் தற்போது அச்சுறுத்தி வருகிறது. இதன் தீவிரத்தை உணர்ந்து, மக்கள் அனைவரும் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 144 உத்தரவை கடைபிடிக்குமாறு அறியுறுத்து வருகிறது.

மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதால் மட்டுமே கொரோனா வைரஸை இந்தியாவில் இருந்து வெளியேற்ற முடியும் என சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஆனால் ஒரு சிலர், கொரோனா வைரஸின் தீவிரம் பற்றி தெரியாமல்,  மிகவும் அசால்டாக வெளியில் நடமாடி கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. 

இப்படி இருக்க வேண்டாம் என, பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த வரை மக்களுக்கும் தன்னுடைய ரசிகர்களுக்கும் வீடியோவின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், மீம்ஸ் மன்னன், வைகைப்புயல் வடிவேலு தன்னுடைய ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் வடிவேலு கூறியுள்ளதாவது... "மனவேதனையோடும், துக்கத்தோடும், சொல்கிறேன்.. தயவுசெய்து அரசின் அறிவுரையை கேட்டு யாரும் வெளியில் கொஞ்ச நாளைக்கு  வர வேண்டாம். மருத்துவ உலகமே மிரண்டுபோய் உள்ளது. தங்களுடைய உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள் அனைவர் உயிரையும் காப்பாற்றிக் வருகிறார்கள்.

அதேபோல் காவல்துறை அதிகாரிகள் பலர் நம்மை பாதுகாக்க பணி செய்து கொண்டிருக்கின்றனர். நமக்காக இல்லை என்றாலும் நம்முடைய சந்ததிக்காக, நம் வம்சா வழியாக நாம் புள்ளகுட்டி, புருஷனை, காப்பாற்றுவதற்காக உயிரோடு இருக்க வேண்டும்.

அதனால் அசால்டாக இருக்க வேண்டாம். தயவு செய்து யாரும் வெளியில் வர வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

emotional advice 😥 pic.twitter.com/UgP09mSBEj

— KollywoodNagar (@KollywoodNagar)

click me!