நடிகர் சேதுராமன் அதிர்ச்சி மரணம்..!

Published : Mar 27, 2020, 07:28 AM ISTUpdated : Mar 27, 2020, 07:34 AM IST
நடிகர் சேதுராமன் அதிர்ச்சி மரணம்..!

சுருக்கம்

நேற்று இரவு சென்னையில் வீட்டில் இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்குச் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 8:30 மணியளவில் அவர் மரணமடைந்தார். 

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன்(37) . எம்.பி.பி.எஸ், எம்.டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றிருந்தார். இவருக்கு கடந்த 2016 ம் ஆண்டு திருமணம் முடிந்து உமையாள் என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50/50 ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார். நடிகர் சந்தானமும் சேதுராமனும் நெருங்கிய நண்பர்கள்.

நேற்று இரவு சென்னையில் வீட்டில் இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்குச் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 8:30 மணியளவில் அவர் மரணமடைந்தார். அவரது உயிர் பிரிந்த செய்தி கேட்டு மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!