ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரான லியனார்டோ டிகாப்ரியோ கிரோட்டாவை சந்தித்துள்ளார். சுவீடனில் கிரேட்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்
"நீ தான் நம்ம காலத்துக்கு ஏத்த தலைவர்"... கிரேட்டா தன்பர்க்கை புகழ்ந்து தள்ளிய லியனார்டோ டிகாப்ரியோ...!
சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக "பள்ளிகள் புறக்கணிப்பு" என்ற போராட்டத்தை முன்னெடுத்தார் கிரேட்டா. இதனை உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் பின்பற்றத் தொடங்கினர். இதையடுத்து நியூயார்க்கில் கிரேட்டா நடத்திய பேரணியில் 156 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். 16 வயது சிறுமியின் அறைக்கூவலுக்கு கட்டுப்பட்டு கூடிய கூட்டத்தைக் கண்டு உலக நாடுகள் ஆச்சர்யம் அடைந்தன.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காலநிலை மாற்றம் தொடர்பாக ஐ.நா சபை சார்பில் நடைபெற்ற மாநாட்டில், கிரேட்டாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ட்ரெம்ப் உட்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் அமர்ந்திருந்த அவையில், பெண் சிங்கமென கர்ஜித்தார் கிரேட்டா. உலக தலைவர்களை பார்த்து உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என கிரேட்டா கேட்ட கேள்வி சமூக வலைத்தளங்களில் உலக அளவில் ட்ரெண்டானது.
தற்போது ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகரான லியனார்டோ டிகாப்ரியோ கிரோட்டாவை சந்தித்துள்ளார். சுவீடனில் கிரேட்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், "மனித வரலாற்றில் முக்கியத் தருணங்களில் மாற்றத்துக்குத் தேவையான குரல்கள் எழும். ஆனால், கிரேட்டா தன்பெர்க் நம் காலத்தின் தலைவராக உருவெடுத்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
A post shared by Leonardo DiCaprio (@leonardodicaprio) on Nov 1, 2019 at 10:22am PDT
மேலும் எதிர்கால சந்ததியினர் இந்த உலகை அனுபவிக்க நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை வைத்து தான் வரலாறு நம்மை யார் என்று தீர்மானிக்கும் என்றும், கிரேட்டாவுடன் நேரத்தை செலவிட்டது தனக்கு கிடைத்த கெளரவம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் முக்கிய நபர்களான லியனார்டோ டிகாப்ரியோ, கிரேட்டா சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.