டெல்லி ஷூட்டிங்கில் விஜய்... தெறிக்கவிடும் "தளபதி 64" லேட்டஸ்ட் போட்டோஸ்...!

By Asianet Tamil  |  First Published Nov 3, 2019, 5:20 PM IST

டெல்லியில் உள்ள கல்லூரிகள் மற்றும் மார்க்கெட்டில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்து வரும் காட்சிகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


டெல்லி ஷூட்டிங்கில் விஜய்... தெறிக்கவிடும் "தளபதி 64" லேட்டஸ்ட் போட்டோஸ்...!

தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. இதனைத் தொடர்ந்து "கைதி" பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "தளபதி 64" படத்தில் விஜய் பிஸியாக நடித்து வருகிறார். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். "பிகில்" திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், பெரிய அளவில் பேசப்படவில்லை. எனவே "தளபதி 64" படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாது, விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற வேண்டும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். 

Latest Videos


அக்டோபர் முதல் வாரத்தில் பூஜையுடன் ஆரம்பித்த ‘தளபதி 64’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு,  22 நாட்களுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தளபதி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்லும் புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் செம வைரலானது. இந்த திரைப்படம் சம்மர் விருந்தாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. 

இந்த படத்தில் மாஸ் ஹீரோ ஒருவர் தான் விஜய்க்கு வில்லனாக களம் இறங்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில்,  விஜய் சேதுபதி "தளபதி 64" படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஆண்ட்ரியா, கெளரி கிருஷ்ணன், சாந்தனு என பெரிய நட்சத்திர பட்டாளமே ‘தளபதி 64’படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிரூத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார். "பிகில்" திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் "தளபதி 64" படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் தான் படம் குறித்து படக்குழு நாள்தோறும் தகவல்களை வெளியிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

தற்போது டெல்லி படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய், அங்கு பரபரப்பாக ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார்.  டெல்லியில் உள்ள கல்லூரிகள் மற்றும் மார்க்கெட்டில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்து வரும் காட்சிகள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 

click me!