
லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ளார். ஹன்சிகா, தமன்னாவுடன் விளம்பர படங்களில் நடித்து பிரபலமான சரவணன் அருளை சோசியல் மீடியாவில் கலாய்க்காதவர்கள் கிடையாது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைக்காக முதலில் விளம்பர படங்களில் நடித்த லெஜண்ட் ஸ்டோர் அண்ணாச்சி, யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை என சினிமாவில் கதாநாயகனாக வேஷம் கட்ட உள்ளார். அதற்கான பூஜை நேற்று வடபழனியில் உள்ள ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றது. சினிமா லெஜண்ட்கள் ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர்.
இதனையடுத்து ஹீரோயின் கீதிகா திவாரியுடன் லெஜண்ட் போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் #legendsaravanan என்ற ஹேஷ்டேக்கும் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. விளம்பர படங்களில் நடிக்கும் போதே வச்சி செஞ்ச நெட்டிசன்கள், இப்போ சும்மா விடுவாங்களா?, அண்ணாச்சியை கலாய்க்க ஓவர் டைம் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார், தல, தளபதி அளவுக்கு முதல் பட பூஜையிலேயே கெத்து காட்ட ஆரம்பித்துவிட்டார் நம்ம சரவணன் அருள், ஆமா பின்ன லெஜண்ட்னா சும்மாவா?, ஒரு விளம்பரம் இருக்கனும் இல்ல. ஏற்கெனவே அருள் விளம்பர படங்களில் நடிக்கிறத பார்த்த நெட்டிசன்கள், கடன் வாங்கியாவது உன் கடையில துணி வாங்குறேன் ராசா, விளம்பரம் மட்டும் நடிக்காத என மரண பங்கம் செய்து வந்தனர்.
தற்போது சரவணன் அருள் சினிமாவில் குதித்துள்ளார் என்ற செய்தி சும்மா இருந்த மீம்ஸ் கிரியேட்டர்களையும் தட்டி எழுப்பியுள்ளது. சிலரோ வா தலைவா, வா என வரவேற்கும் விதமாகவும், நெட்டிசன்கள் வச்சி செய்யும் விதமாகவும் புதுப்புது மீம்ஸ்களை கிரியேட் செய்து சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளனர்.
குறிப்பாக யாராடி நீ மோகினி படத்தில் வரும் அச்சச்சோ எனக்கு வெட்க, வெட்கமா வருதே என்ற காட்சிய வைத்து தயாரிக்கப்பட்டுள்ள மீம்ஸ்கள் செம்ம வைரலாகி வருகிறது. மேலும் ரஜினி, அஜித், விஜய் ஆகியோருடன் ஒப்பிட்டும் விதவிதமான மீம்ஸ்கள் சோசியல் மீடியாவில் வட்டமிட தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.