
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கியுள்ள படம் "டகால்டி". சந்தானம், யோகிபாபு ஒன்றாக இணைந்து கலக்கியுள்ள இந்தப் படத்தில், ராதாரவி, ரித்விகா சென், மனோபாலா, சந்தான பாரதி, ஹேமந்த் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக டகால்டி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை எஸ்.பி. செளத்ரியின் 18 ரீல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சந்தானத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஹேண்ட்மேட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக திரையில் தோன்றாமல் இருந்த சந்தானம், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள "டகால்டி" படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. சந்தானம், யோகிபாபு கூட்டணி காமெடியில் கவுண்டமனி, செந்திலை நினைவுபடுத்துகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் சந்தானம் மாஸ் காட்டியுள்ளார். வழக்கம் போல யோகிபாபு தனது டைமிங் காமெடியால் எல்லோரையும் சிரிக்கவைக்கிறார். டீசர் வெளியான சில மணி நேரங்களில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்த நிலையில், தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து டகால்டி டீசர் யூ-டியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
இந்த டீசர் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே யோகிபாபுவை மரண கலாய் கலாய்த்து சந்தானம் பேசியுள்ள வசனம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. "நீயும் இவ்வளவு பெரிய நடிகன் ஆவேன்னு நான் எதிர்பார்க்கலடா, என்னமா ஆக்ட்டு கொடுக்குற" என கலாய்த்துள்ளார். மேலும் அஜித், விஜய்யை வைத்து படம் இயக்குவேன் என்று சொல்லும் நடிகை ரித்திகா சென்னிடம் "அப்புறம் சிறுத்தை சிவா, அட்லீ எல்லாம் என்ன பண்ணுவாங்க" என காமெடியாக கேட்டுள்ளார். வழக்கமான கலகல பாணியில் சந்தானம் பேசியுள்ள டைலாக்குகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.