கடவுளிடம் இருக்கும் அந்த ஒன்று ரஜினியிடம் உள்ளதா..!! பரபரக்கும் திரையுலகம்..!!

Published : Dec 02, 2019, 03:52 PM IST
கடவுளிடம் இருக்கும் அந்த ஒன்று ரஜினியிடம் உள்ளதா..!!  பரபரக்கும் திரையுலகம்..!!

சுருக்கம்

16 வயதினிலே திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு  பேசப்பட்ட சம்பளத் தொகையிலிருந்து 500 ரூபாய் பாக்கி வைத்ததாகவும், அதை இப்போது பார்த்தால் கூட அவர்  நினைவில் வைத்து கேட்கிறார் எனவும் ரஜினிக்கும் தனக்கும் இடையேயான நட்பு குறித்து  நகைச்சுவையாக பேசினார். 

கடவுளிடம்  உள்ளது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஏதோ ஒரு பவர் இருக்கிறது என  இயக்குனர் பாரதிராஜா மனம் திறந்து பேசியுள்ளார்.  எப்போதும் நடிகர் ரஜினிகாந்துக்கும் திரை இயக்குனர்  பாரதிராஜாவிற்கும் இடையே மெல்லிய கருத்து முரண்கள்  இருந்து வருவதை அனைவரும் அறிவர். பல நேரங்களில் அதை பாரதிராஜாவை சொல்ல நாம்  கேட்டிருக்கிறோம்.  ஆனாலும் இருவருக்குமிடையே ஒரு அசைக்க முடியாத நட்பு இருந்து வருகிறது.  

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நடிகர் ரஜினியின் பிறந்த நாளையொட்டி வேலூரில் விழா ஒன்று நடைபெற்றது .  அதில் இயக்குனர் பாரதிராஜா ,   திரைப்படதயாரிப்பாளர் கலைப்புலி தாணு,  பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்ளிட்ட இன்னும் சிலர் பிரபலங்கள் கலந்து கொண்டனர் . அந்நிகழ்ச்சியில் பேசிய  பேசிய இயக்குனர் பாரதிராஜா ,  16 வயதினிலே திரைப்படத்தில் நடிக்க ரஜினிகாந்திற்கு  பேசப்பட்ட சம்பளத் தொகையிலிருந்து 500 ரூபாய் பாக்கி வைத்ததாகவும், அதை இப்போது பார்த்தால் கூட அவர்  நினைவில் வைத்து கேட்கிறார் எனவும் ரஜினிக்கும் தனக்கும் இடையேயான நட்பு குறித்து  நகைச்சுவையாக பேசினார். இன்னொருவரால்  நடிகர் ரஜினிகாந்த் ஆக பிறக்க முடியாது எனக் குறிப்பிட்டார் . 

 மற்றவர்களில் இருந்து ரஜினி வேறுபட்டு காணப்பட கடவுளிடம் உள்ளது போன்ற ஏதோ ஒன்று நடிகர் ரஜினியிடமும்  உள்ளது என்றார் .  அதுதான் அனைவரையும் இழுக்கிறது எனக்கூரிய பாரதிராஜா ரஜினிகாந்துடன்,  48 ஆண்டுகால நட்பு தனக்கு உள்ளது என்றார்.  அதேநேரத்தில் அரசியலுக்கு வந்தால் கொள்கையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது என நடிகர் ரஜினிகாந்துக்கு தான் அறிவுறுத்தி உள்ளதாகவும்  இயக்குனர் பாரதிராஜா குறிப்பிட்டார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!