பிரபல நடிகையை சுட்டுக்கொல்ல முயற்சி! திரையுலகில் பரபரப்பு!

Published : Dec 17, 2018, 05:15 PM ISTUpdated : Dec 19, 2018, 10:10 AM IST
பிரபல நடிகையை சுட்டுக்கொல்ல முயற்சி! திரையுலகில் பரபரப்பு!

சுருக்கம்

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிரபல மலையாள நடிகை லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ்,  'இன் கோவா' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிரபல மலையாள நடிகை லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ்,  'இன் கோவா' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் 'மெட்ராஸ் கஃபே' என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.  இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் ரூபாய் 18 கோடி, மோசடி செய்ததாக போலீசார் இவரை சமீபத்தில் கைது செய்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கொச்சியில் லீனா மரியா பால் நடத்திவரும் பியூட்டி பார்லரை நோக்கி பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அரங்கேறிய போது, லீனா மரியா பால் கடையில் இல்லை 2 பெண் ஊழியர்கள் மட்டுமே இருந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே,  போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் சில நாட்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த, மாபியா கும்பல் தலைவன் ரவி புஜாரா, லீனா மரியாவுக்கு போன் செய்து ரூபாய் 25 கோடி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கொச்சி போலீசில் லீனா மரியா புகார் செய்துள்ளார்.  எனவே மும்பை தாதா ஆத்திரத்தில் ஆட்களை அனுப்பி துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

அதே போல் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வராத நடிகை லீனா மரியா பாலுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் ரவி புஜாராவை தேடி மும்பைக்கும் தனிப்படை போலீசார் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு நடிகைக்கு இப்படி நடந்துள்ளதால் மலையாள திரையுலகே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!