
தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பிரபல நடிகர் துல்கர் சல்மான். மேலும் 'வாயை மூடி பேசவும்' , 'நடிகையர் திலகம்' ஆகிய படங்களிலும் நடித்து பிரபலமானவர்.இவர் பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் தற்போது இந்தியில் தயாராகும் 'தசோயா பேக்டர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடிக்கிறார்.
துர்கா சேர்மன் காருக்குள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து செல்போன் பார்ப்பது போன்றும். அருகில் ஒரு பெண் ஆபத்தானவர் என்று பேசுவது போன்றும் ஒரு வீடியோவை மும்பை போலீசார் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இது நிஜமாகவே ஆபத்தானதுதான் கார் ஓட்டும்போது இப்படி செய்வது உடன் பயணிப்போரின் உயிருக்கும் உலைவைக்கும் இதுபோன்று செயல்படுவதை சினிமாவில் கூட அனுமதிக்க மாட்டோம் என்று அவருக்கு கண்டனத்தையும் பதிவிட்டு இருந்தனர்.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இதற்கு துல்கர் சல்மான் விளக்கம் அளித்து கூறியதாவது.... " நான் காரில் டிரைவர் இருக்கையில் இருந்து செல்போன் பார்க்கும் வீடியோ, இந்தி படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது.
நான் ஓட்டிய கார் டிரக்கில் கட்டப்பட்டு இருந்தது. முன்னாள் கேமரா இருந்தது நான் நினைத்தாலும் காரை ஓட்டவோ திருப்பவோ முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். சோனம் கபூர் தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவை போலீசார் உண்மை என கருதி துல்கர் சல்மானை எச்சரித்தது தெரியவந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.