’மாதவனுக்கு இன்னொரு பேரு இருக்கு...ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு குவியும் பாராட்டுக்கள்...

Published : Dec 17, 2018, 02:20 PM IST
’மாதவனுக்கு இன்னொரு பேரு இருக்கு...ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு குவியும் பாராட்டுக்கள்...

சுருக்கம்

இந்த நிலையில், நம்பி நாராயணன் வேடத்தில் இருக்கும் தனது தோற்றத்தை மாதவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுஅதை விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு டேக் செய்துள்ளார். 


நடிகர் மாதவனின் கனவுப்படமான ‘ராக்கட்ரி’ த நம்பி எஃபெக்ட்... படத்தின் முதல் பார்வை இன்று வெளியானது. இதை பெருமையுடன் வெளியிட்ட மாதவன், ‘உங்க பக்கத்துல நெருங்கவே முடியலை சார்’ என்று விஞ்ஞானி நம்பிக்கு டேக் செய்துள்ளார்.

மாதவன் இணை இயக்குநராகவும் பணிபுரியும் இப்படத்தில், நம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ஆனந்த் மகாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. 

இந்த நிலையில், நம்பி நாராயணன் வேடத்தில் இருக்கும் தனது தோற்றத்தை மாதவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுஅதை விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு டேக் செய்துள்ளார். அதில் உங்க ’இடத்தை’ அடையிறதுக்கு ரொம்பக் கஷ்டப்படவேண்டியிருக்கு சார். ஆனாலும் என்னால ஆன எல்லா முயற்சிகளையும் எடுத்துக்கிட்டு இருக்கேன்’ என்று பகிர்ந்திருக்கிறார். 

அதன் பின்னூட்டங்களில் அவர் இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பதாகவும் டெடிகேஷனுக்கு இன்னொரு பேரு மாதவன் என்று இந்தி பிரபலங்களும்  ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!