லீனாவை ஆதரித்தால்....நடிகர் சித்தார்த்தின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சுசி கணேசன்!

Published : Oct 17, 2018, 03:27 PM IST
லீனாவை ஆதரித்தால்....நடிகர் சித்தார்த்தின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சுசி கணேசன்!

சுருக்கம்

லீனா மணிமேகலை சுசி கணேசன் பஞ்சாயத்தில் உள்ளே புகுந்து செம ரகளையில் இறங்க ஆரம்பித்திருக்கிறார் நடிகர் சித்தார்த். துவக்கத்திலிருந்தே மி டு’ பாலியல் பிரச்சினையில் நீதி கேட்கும்பெண்களுக்கு ஆதரவாக முதல் குரல் எழுப்புவதை தனது கடமையாக கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார் சித்தார்த்.

தனது கடமை உணர்ச்சியின் தொடர்ச்சியாக நேற்றுமுதல் நடந்து வரும் சுசி கணேசன் -லீனா மணிமேகலை பஞ்சாயத்தில் மூக்கை நுழைத்த சித்தார்த், லீனாவுக்கு ஆதரவாக தான் நிற்பதாக ட்விடிட்டியிருந்தார். இதைப் படித்து ரத்தம் கொதித்த சுசி, நேராய் சித்தார்த்தின் வீட்டு எண்ணுக்கு போன் செய்ய அங்கே போனை எடுத்தவர் சித்தார்த்தின் அப்பா. வயதானவரென்றும் பாராமல் சுசி அவரை சுளுக்கெடுக்க, தகவல் அறிந்த சித்தார்த், ‘என் அப்பாவை மிரட்டுவதால் மட்டும் பயந்துவிட மாட்டேன். 

என் சகோதரி லீனாவுக்கு ஆதரவாக என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்’ என்று சுசியை மேலும் வெறுப்பேற்றியிருக்கிறார். சமபவத்தின் தொடர்ச்சியாக சித்தார்த்தின் சகோதரி லீனா தனது ட்விட்டில்...’சுசி கணேசன் என் மேல் கிரிமினல் கேஸ் போட்டிருப்பதாக மீடியாவில் flash செய்கிறார். முதலில் கோர்ட்டில் நம்பர் ஆகட்டும். நோட்டீஸ் வரட்டும். Let me then quash it. இவனை மாதிரி பொய்யர்களோடல்லாமல் நேரடியாக அதிகாரத்தோடு போர் புரிவதும் தான் எனக்கும் பிடிக்கும்’ என்கிறார். ம்...நடக்கட்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!