
தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவருடன் 80 களில் நாயகியாக நடித்த நடிகைகள் பலர், தற்போது இவர்கள் எல்லாம் சீரியல் நடிகைகளாக மாறி விட்டனர்.
மேலும் அவ்வப்போது, விஜய் மற்றும் மற்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த, மறக்க முடியாத நினைவுகளை... பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக 'செந்தூரபாண்டி' படத்தில் நடித்த, நடிகை யுவராணி... சமீபத்தில் விஜயுடன் நடித்த அனுபவம் பற்றியும் தற்போது விஜய் ஒரே அடியாக மாற்றிவிட்டார் என கூறி தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் யுவராணி.
'செந்தூரபாண்டி' படப்பிடிப்பின் போது விஜய் தன்னிடம் ஒரு கல்லூரி மாணவனாக மட்டும் தான் பழகினார். ஒரு நடிகராக ஒரு முறை கூட நடந்து கொண்டது இல்லை. ஆனால் இப்போது அப்படியே மாறிவிட்டார்.
ஆனால் இப்போது அவர் தனக்கு நல்ல நண்பர், எப்போதாவது போன் செய்து பேசுவோம். உச்ச நடிகர் என்கிற அந்தஸ்தில் அவர் இருந்தாலும், குடும்பத்தை மிகவும் நன்றாக கொண்டு செல்கிறார் என தன்னுடைய வாழ்த்துக்களை விஜய்க்கு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.