
லிங்குசாமி இயக்கத்தில் விஷால்- கீர்த்திசுரேஷ் நடித்திருக்கும் ‘சண்டக்கோழி2’ நாளை ரிலீஸாவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. படங்களைக் காப்பி அடிக்க உதவிய பத்து தியேட்டர்களுக்கு இனி புதுப்படங்களை திரையிடக் கொடுப்பதில்லை என்ற முடிவை கடந்த வாரம் அறிவித்திருந்த விஷால், அந்த முடிவை ‘சண்டக்கோழி2’ படம் மூலம் செயல்படுத்தி பலரின் சபாஷைப் பெற்றார்.
ஆனால் அந்தப் பாராட்டே விஷாலுக்கு பெரும் வேட்டாக அமைந்துள்ளது. விஷால் அந்த முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பதாக கூறி துவக்கத்தில் திருச்சி ஏரியா திரையரங்க உரிமையாளர்கள் தகராறில் ஈடுபட, லேட்டஸ்டாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழகத்தின் எந்த மூலையிலும் ‘சண்டக்கோழி2’ படத்தைத் திரையிட தடை விதித்துள்ளனர்.
திருட்டு வி.சி.டி. எடுக்க உதவிய தியேட்டர்களைத் தண்டிக்க கூட ஒரு தயாரிப்பாளர் சங்கத்தலைவருக்கு உரிமையில்லையா என்று தயாரிப்பாளர் தயாரிப்பு தவிக்க கொதிக்க, இன்று மாலை இரு தரப்புக்கும் பஞ்சாயத்துக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் விஷால் தன் படம் தள்ளிப்போய்விடக்கூடாதே என்கிற சுயநலத்துக்காக இறங்கிப்போனால் அதைவிட பரிதாபமான செய்தி இருக்கமுடியாது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.