
அடிப்படை ஆதாரமின்றி தன்மீது லீனா மணிமேகலை பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவருவதால் அவர் மீது வழக்கு தொடர்ந்தார் இயக்குநர் சுசி கணேசன். இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரனைக்கு வருகிறது.
நேற்று இயக்குநரும், குறும்பட இயக்குநரும் மாறி மாறிப் பேட்டி கொடுத்ததை முகநூலில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அவர்களில் லீனா மணிமேகலையும் ஒருவர். ’தான் பிரபலடைய வேண்டும் என்ற அல்ப எண்ணத்தில் என்னை வம்புக்கு இழுக்கிறார்’ என்று சுசி கூறிய குற்றச்சாட்டுக்கு தனது முகநூல் பக்கத்தில்...
சுசி கணேசன் சொல்வது போல பொய்யாக குற்றச்சாட்டு சொல்லி இன்னும் பிரபலமாக வேண்டும் என்பது தான் என் நோக்கம் எனறால், ஹேண்ட்சம்மாக, எனக்கு heavy crush இருக்கிற, நான் விரும்பும் சினிமா எடுக்கும், நன்கு அறியப்பட்ட, சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவரை தேர்ந்தெடுத்து சொல்லியிருப்பேன். நிச்சயமாக இதில் எந்த லட்சணமும் சுசி கணேசனுக்கு இல்லை. உங்க மொழியில் குணமா “நல்ல வார்த்தை” எல்லாம் போட்டு இதை எப்படி சொல்வது? என்று மகா மட்டமாக சுசி கணேசனை நக்கலடித்திருக்கிறார் லீனா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.