
கவிஞர் வைரமுத்து மீது சின்மயி, பாலியல் புகாரை முன் வைத்ததில் இருந்து தொடர்ந்து பல பெண்கள் மீடூ ஹாஷ்டாக் மூலம் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பெண் கவிஞரும், இயக்குனரும், நடிகையுமான லீனா மணிமேகலை தான் 2005ல் தொகுப்பாளினியாக இருந்தபோது தன்னிடம் காரில் இயக்குனர் சுசிகணேசன் தவறாக நடக்க முயன்றார் என்றும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிதான் தப்பித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக சுசிகணேசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்ததோடு, சமூக வலைதள பக்கத்தில் நீண்ட பதிவை பதிவிட்டு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்.
லீனா மணிமேகலை குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுசி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது... "உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்து விட்டது. இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களோடு சகதியில் இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ? அரை மணி நேர பேட்டியில் அறிமுகமான முதல் அறிமுகத்திலேயே ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுப்பை பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ அவன் எஞ்சின் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர்.
அனைத்தும் பொய் மூட்டைகள் என்பதை நிரூபிக்கும் ஆதாரம் என்னிடம் இருக்கிறது அவற்றை வெளியிடுவதற்கு முன் என்னை கொச்சைப்படுத்திய அந்த பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன் இல்லையென்றால் கோர்ட் மூலமாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற மீடூ இயக்கத்தை சுய பழிவாங்களுக்கு பயன்படுத்தும் 'சமுதாய வைரஸ்களை' காலை எடுப்பதைக்கு பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளர்.
அதே போல் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நீங்கள் சொன்ன பொய்யால் என் கற்பு பறிபோய்விட்டது. ஆணுக்கும் கற்பு இருக்கிறது. இதற்கு மன்னிப்பு கேட்ட தீர வேண்டும் என கூறியுள்ளார். தற்போது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.