Leena Manimekalai : பன்னி மூஞ்சு என கிண்டலடித்த நெட்டிசனுக்கு லீனா மணிமேகலை கொடுத்த செருப்படி ரிப்ளை

Published : Feb 27, 2023, 11:58 AM IST
Leena Manimekalai : பன்னி மூஞ்சு என கிண்டலடித்த நெட்டிசனுக்கு லீனா மணிமேகலை கொடுத்த செருப்படி ரிப்ளை

சுருக்கம்

லீனா மணிமேகலையின் புகைப்படத்தையும் பன்றி ஒன்றின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு கிண்டலடித்த நெட்டிசனுக்கு அவர் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

கவிஞர், தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் லீனா மணிமேகலை. பல்வேறு முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான மாதம்மா என்கிற ஆவணப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இதையடுத்து பறை, செங்கடல், அல்டர் என ஏராளமான ஆவணப்படங்களை இயக்கிய இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் மாடத்தி. இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது.

இதையடுத்து கடந்தாண்டு இவர் இயக்கிய காளி என்கிற ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் ஒருவர் சிகரெட் புகைப்பதும், கையில்  LGBT சமூகத்தின் கொடியை வைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லீனா மணிமேகலையில் இந்த ஆவணப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடவுளை அவமதித்ததாக அவர்மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்... மைனஸ் 12 டிகிரி குளிரில் லியோ ஷூட்டிங்... லோகேஷுக்கு அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்றதாக மிஷ்கின் நெகிழ்ச்சி

இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாதவராக வலம் வரும் லீனா மணிமேகலை, டுவிட்டரிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இந்த நிலையில், நெட்டிசன் ஒருவர், லீனா மணிமேகலையின் புகைப்படத்தையும் பன்றி ஒன்றின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டு, அவரது முகம் பன்றியை போன்று இருப்பதாக கிண்டலடித்து இருந்தார். தரக்குறைவாக ட்ரோல் செய்த அந்த நெட்டிசனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், லீனா மணிமேகலையே அதற்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

அதன்படி அந்த நெட்டினுக்கு பதிலடி கொடுத்து லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளதாவது : “பன்றிகள் நல்லது செய்கின்றன. உன்னைப் போன்ற ஹேட்டர்கள் செய்யும் அசுத்தங்களை அவை நீக்கி சுத்தமாக்குகின்றன. பன்றிகளிடம் இருந்து கற்றுக்கொள்” என செருப்படி ரிப்ளை கொடுத்து அந்த நெட்டிசனை வாயடைக்க செய்துள்ளார் லீனா மணிமேகலை. அவரின் இந்த பதிலுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... ஒன்னு ரெண்டுன்னா பரவாயில்ல, 7 பேர இந்தியன் தாத்தா எப்படித்தான் சமாளிப்பாரோ?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!