மீண்டும் இயக்குனர் அவதாரம்.. பழைய வெற்றிப்படத்தை தூசுத்தட்டும் சிம்பு? - STR 50 அந்த படத்தின் இரண்டாம் பாகமா?

By Ansgar R  |  First Published Feb 4, 2024, 7:01 PM IST

Silambarasan 50 : பிரபல நடிகர் சிம்பு அவர்கள், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார். அந்த படத்தை உலக நாயகனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வருகின்றது.


உலக சினிமா வரலாற்றிலேயே தனது முதலாவது வயது முதல் நடித்து வரும் ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அது சிம்பு ஒருவர் தான் என்று கூறினால் அது மிகையல்ல. 1984 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் டி ராஜேந்தர் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான "உறவை காத்த கிளி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர்தான் சிம்பு. 

தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சிம்பு அவர்கள் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்கின்ற பட்டத்தை பெற்றார். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு வெளியான "மோனிஷா என் மோனோலிசா" என்கின்ற திரைப்படத்தில் இளைஞனாக வலம் வர துவங்கிய சிம்பு அவர்கள் இன்று தனது 48வது திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.

Tap to resize

Latest Videos

அட நம்ம சென்னை 28 செல்வியா இது? அழகு ராணியாக மாறி அசத்தல் போஸ் கொடுத்த விஜயலக்ஷ்மி - லேட்டஸ்ட் பிக்ஸ் இதோ! 

கடந்த சில ஆண்டுகளாகவே அவருடைய திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றியடையாதது அவருடைய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த சூழலில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் சிம்புவின் 48வது திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்நிலையில் தனது 50வது திரைப்பட பணிகளை விரைவில் துவங்க உள்ள நடிகர் சிம்பு அவர்கள் அந்த திரைப்படத்தை தானே இயக்க உள்ளதாக சிலர் தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஏற்கனவே ஒரு படத்தை இயக்கியுள்ள நடிகர் சிம்பு அவர்கள் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான "மன்மதன்" என்கின்ற திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்பு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அதுதான் அவருடைய ஐம்பதாவது திரைப்படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் நடித்து வரும் 48வது திரைப்படமும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது என்றும் கூறப்படுகிறது. 

சூர்யாவின் டோடல் குடும்பத்துக்கு இவங்கதான் செல்லம்.. Kobeக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன ஜோ - Cute Video!

click me!