பெரிய சம்பவம் லோடிங்.. SKயின் ஜிகிரி தோஸ்த்துடன் கைகோர்க்கும் விஷ்ணு விஷால் - என்ன மாதிரி படமா இருக்கும்?

Ansgar R |  
Published : Feb 04, 2024, 06:42 PM IST
பெரிய சம்பவம் லோடிங்.. SKயின் ஜிகிரி தோஸ்த்துடன் கைகோர்க்கும் விஷ்ணு விஷால் - என்ன மாதிரி படமா இருக்கும்?

சுருக்கம்

Vishnu Vishal New Movie : பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் விரைவில் லால் சலாம் திரைப்படம் வெளியாகவுள்ளது. மேலும் பல படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகின்றார்.

மிகப்பெரிய போலீஸ் அதிகாரியின் மகனாக பிறந்த விஷ்ணு விஷால் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் காரணமாக பல கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய காலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையினால் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெறும் நிலைக்கு தள்ளப்பட்டார். 

இந்த சூழ்நிலையில்தான் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான "வெண்ணிலா கபடி குழு" என்கின்ற திரைப்படத்தில் நாயகனாக களம் இறங்கினார். அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக எடிசன் வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை விஷ்ணு விஷால் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அட நம்ம சென்னை 28 செல்வியா இது? அழகு ராணியாக மாறி அசத்தல் போஸ் கொடுத்த விஜயலக்ஷ்மி - லேட்டஸ்ட் பிக்ஸ் இதோ!

அதன் பிறகு அவருடைய நடிப்பில் வெளியான "பலே பாண்டியா", "குள்ளநரி கூட்டம்", "நீர்பறவை", "முண்டாசுப்பட்டி", "இன்று நேற்று நாளை" மற்றும் "மாவீரன் கிட்டு" போன்ற பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக மாறியது. இடையில் இவருக்கும் பிரபல நடிகர் சூரி அவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான "கட்டா குஸ்தி" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்த விஷ்ணு விஷால், தற்போது "மோகன்தாஸ்", "ஆரியன்" மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் "லால் சலாம்" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

இந்த சூழ்நிலையில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடைய கல்லூரி கால நண்பரான இயக்குனர் அருண் ராஜா காமராஜுடன் ஒரு திரைப்படத்தில் அவர் இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை விஷ்ணு விஷால் அவர்களே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.

சூர்யாவின் டோடல் குடும்பத்துக்கு இவங்கதான் செல்லம்.. Kobeக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்ன ஜோ - Cute Video!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?