
மெரினா கடற்கரையில் தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், உண்மையாக தமிழ் உணர்வுடன் போராட்டத்தில் குதித்த ஒரு சில நடிகர்களை ஏற்று கொண்ட மக்கள்.
இப்போது வரை எந்த ஒரு கட்சியினரையும் தங்களது போராட்டத்திற்குள் இளைஞர்களும், பொது மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் ஸ்பெயின் நாட்டினர் மீது இதே பீட்டா, காளை சண்டை நடத்த கூடாது என வழக்கு தொடர்ந்த போது அந்த நாட்டு முதல் அமைச்சர்கள் முதல் அனைவரும் அதனை ஏற்று கொள்ளவில்லை.
ஆனால் இந்தியா எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதனை ஏற்று கொண்டது.
இதன் காரணாமாக இன்று வரை தனியாக நின்று தன்னுடைய பாரம்பரிய விளையாட்டை மீட்க ஒவ்வொரு தமிழனும் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தி வருகிறான்.
இதையே முன் வைத்து மெரினாவில் நடிகர் லாரன்ஸ் அரசியல் தலைவர்கள் பற்றியும் தற்போது போட பாட்டுல அவசர சட்டம் குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில் தனக்கு முதலமைச்சர் பன்னீர் செல்வதை மிகவும் பிடிக்கும் என கூறினார்.... ஏனென்றால் இவ்வளவு அமைதியான ஒரு முதலமைச்சரை நினைக்கையில் அதிசயமாக இருக்கிறது என்றார்.
மேலும் இப்போது அவசரம் சட்டம் கொண்டு வந்தாலும் தங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து என் சகோதர சகோதரிகளுடன் இருந்து போராட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த போராட்டம் மேலும் பல அரசியல் மாற்றங்களை கொண்டு வரும் என கூறிய அவர் அடுத்ததாக விவசாயிகள் பிரச்சனை, மணல் திருட்டு, பெற்ற தாயை ஆசிரமத்தில் விடுபவர்கள் என இந்த அறப்போராட்டம் மேலும் மாபெரும் போராட்டமாக தொடரும் என கூறியுள்ளார்.
இப்போது அவசர சட்டத்தை முதலமைச்சர் ஓ .பன்னீர் செல்வம் கொண்டு வந்தது , மாணவ மாவிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என தெரிவித்த அவர், தொடர்ந்து வாடிவாசலில் இனி எப்போதும் எந்த தடையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்து விடும் நிலை வரும் வரை தொடர்ந்து போராடுவோம் என தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.