
நடிகர் லாரன்ஸ் ஜல்லிக்கட்டுக்கு அவசரம் கொண்டு வந்து பின் தற்போது நிரந்தர சட்டம் கொண்டுவர ஏற்பாடுகள் செய்து வருவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வதை மாணவர்களுடன் சென்று நடிகர் லாரன்ஸ் நன்றி தெரிவித்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், தான் முதலமைச்சரிடம் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு முதலமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார் .
மேலும் இந்த போராட்டம் நல்ல முறையில் சந்தோஷமாக நிறைவு செய்ய வேண்டிய போராட்டம் என்றும் ஆனால் போலீசார் தீடீர் என மாணவர்கள் மீது தடியடி நடத்தியதன் காரணமாக இது கலவரமாக மாறியது எனவும் கூறினார்.
இந்த கலவரத்தால் பாதிக்க பட்ட ஐஸ் ஹவுஸ் மீனவா மக்களுக்கு, நிவாரணம் வழங்குவது குறித்தும் முதலமைச்சருடன் பேசியதாகவும் விரைவில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக லாரன்ஸ் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.