
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், சென்னை சைதாப்பேட்டையில் ஆஸ்ரமம் என்கிற தனியார் பள்ளியை நடத்தி வருகிறார்.
இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். மேலும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் மதுராந்தகத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தோட்ட வேலை செய்து வருகிறார்.
இவர் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் ஒன்றில் உயரமாக வளர்ந்திருந்த மரக்கிளையை மரத்தின் மீது ஏறி வெட்டியுள்ளார் ஆறுமுகம். அப்போது எதிர்பாராத விதமாக இவர் கால் தவறி கீழே விழுந்தார். அப்போது மூச்சி திணறல் ஏற்பட்டு துடித்துள்ளார். பின் பயக்க நிலைக்கு சென்ற இவரை பள்ளி வளாகத்தில் இருந்த ஊழியர்கள் இவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.