லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் !! ஐசியூவில் தீவிர சிகிச்சை !!

Published : Nov 14, 2019, 09:45 AM ISTUpdated : Nov 14, 2019, 09:46 AM IST
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் !! ஐசியூவில் தீவிர சிகிச்சை !!

சுருக்கம்

பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

90 வயது பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த திங்கட்கிழமை சுவாச பிரச்சினையால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச்கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை  வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், அவரது உடல் நலத்தில் நேற்று ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனாலும் அவர்து உடல்நிலை கவலைக்கிடமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் இசைக்குயில் என வர்ணிக்கப்படும் லதா மங்கேஷ்கர் பல்வேறு மொழி படங்களில் 30 ஆயிரம் பாடல்களை பாடியவர். பாரத ரத்னா விருதும் பெற்றவர் ஆவார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!