ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திருவண்ணாமலையில், 'லால் சலாம்' படப்பிடிப்பை துவங்கிய நிலையில் அங்கேயே, படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் திருவண்ணாமலையில் இவர் சாமி தரிசனம் செய்த வீடியோக்களும் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எக்ஸ்டெண்ட்டட் கேமியோ ரோலில், தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'. மொய்தீன் பாய் என்கிற ரோலில் ரஜினிகாந்த் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
'லால் சலாம்' படப்பிடிப்பை கடந்த ஏப்ரல் மாதம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் துவங்கினார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, திருவண்ணாமலையில் துவங்கிய நிலையில்... முதல் கட்ட படப்பிடிப்பிலேயே சூப்பர் ஸ்டாரின் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதே போல் இந்த படத்தின் மூலம் பல வருடங்களுக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள ஜீவிதாவின் கதாபாத்திரம் குறித்த காட்சிகளும் படமாக்கப்பட்டது.
அப்படி போடு... 'மாவீரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! உற்சாகத்த்தில் ரசிகர்கள்!
தொடர்ந்து பல்வேறு இடங்களில் மிகவும் பரபரப்பாக, 'லால் சலாம்' படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் திருவண்ணாமலையில் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவித்துள்ளார். மேலும் இவர் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து, தன்னுடைய படம் வெற்றி பெறவேண்டும் என வேண்டிக்கொண்டுள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார். இதில் 9 கிலோ அதிக எடை.. 8 இருண்ட நிழல்கள்… 7 மாதங்கள் கழித்து… மாலை 6 மணி படம் துவங்கி... 5 மடங்கு புத்திசாலி மற்றும் தைரியமான… 4 மாதங்கள் வேலை... கடந்த நாள் 3 கால்ஷீட்கள் இருபத்தி இரண்டு மணிநேரம் விடியும் வரை இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் முடிவடைந்தது!
Director Siddique: விஜய்யை வைத்து 'பிரெண்ட்ஸ்' படத்தை இயக்கிய இயக்குனர் சித்திக் கவலைக்கிடம்!
2 எனது #லால்சலாம் குடும்பத்தினர் கடின உழைப்புக்கு நன்றி...கடைசியாக 1 விஷயம் ..தற்செயலாக இருக்க முடியாது .. ஷூட்டிங் இங்கே ஆரம்பித்து உங்கள் ஆசீர்வாதத்துடன் இங்கே முடிந்தது என தெரிவித்துள்ளார்.