Director Siddique: விஜய்யை வைத்து 'பிரெண்ட்ஸ்' படத்தை இயக்கிய இயக்குனர் சித்திக் கவலைக்கிடம்!

By manimegalai a  |  First Published Aug 7, 2023, 9:35 PM IST

தளபதி விஜய்யை வைத்து பிரெண்ட்ஸ் படத்தை இயக்கிய இயக்குனர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 


கேரளாவை சேர்ந்த இயக்குனர் சித்திக், 1986 ஆம் ஆண்டு 'பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய வித்தியாசமான கதை களத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து மோகன்லாலை வைத்து 'நாடோடிக்காட்டு' என்கிற படத்தை. இயக்கினார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மலையாள திரையுலக முன்னணி நடிகர்களின் ஃபேவரைட் இயக்குனராகவும் மாறினார்.

இவர் தமிழில் தளபதி விஜய்யை வைத்து, பிரெண்ட்ஸ் மற்றும் காவலன் படத்தை இயக்கினார். அதே போல் விஜயகாந்த் - பிரபு தேவா நடிப்பில் வெளியான, சூப்பர் ஹிட் படமான 'எங்கள் அண்ணா' படத்தை இயக்கினார். கடைசியாக தமிழில் அரவிந்த் சாமியை வைத்து 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதே போல் மலையாளத்தில் 2020 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் வெளியான 'பிக் பிரதர்' படத்தை இயக்கிய நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Tap to resize

Latest Videos

கல்யாண கலை வந்துடுச்சே..! சேலையழகில் தமன்னா போட்ட புகைப்படத்திற்கு தெறிக்கும் கமெண்ட்ஸ்..! போட்டோஸ்..!

இந்நிலையில் சித்திக் நிமோனியா மற்றும் கல்லீரல் நோய் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் மூன்று மணியளவில், அவருக்கு எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது இயக்குனர் சித்திக்கின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு எக்மோ சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் மலையாள திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!